ராஜா ஆயுர்வேத மருத்துவமனை மற்றும் புத்துணர் சிகிச்சை மையங்கள்
GMP, ISO சான்றிதழ் மற்றும் NABH அங்கீகாரம் பெற்ற ஆயுர்வேத மையங்கள்.

ராஜா ஹெல்தி ஏக்கர்ஸ்
பாலக்காடு மாவட்டம் கூட்டநாட்டில் அமைந்துள்ள இந்த மையம் 'கிரீன் லீஃப்' (Green Leaf) சான்றிதழ் பெற்றது. இங்கு பெரும்பாலான நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க வசதிகள் உள்ளன.

ராஜா ஐலேண்ட்
குருவாயூர் அருகே சேட்டுவா எனும் இடத்தில் அழகான காயலின் நடுவில் ரம்மியமான கண்டல் காடுகளின் அருகில் அமைந்துள்ள. இது 'கிரீன் லீஃப்' சான்றிதழ் பெற்ற மருத்துவமனையாகும்.

ராஜா பீச்
திருச்சூர் மாவட்டம் அகலாடு எனும் இடத்தில் ரம்மியமான கடற்கரை ஓரம் அமைந்துள்ள எங்கள் மருத்துவமனை கேரளாவின் முதல் NABH அங்கீகாரம் பெற்ற ஆயுர்வேத மருத்துவமனையாகும்.

ராஜா ஈகோ பீச்
இதுவும் திருச்சூர் மாவட்டம் அகலாடில் கடற்கரை ஓரம் அமைந்துள்ளது.
ராஜா ஆயுர்வேதா
இயற்கையான வாழ்வியல் மருத்துவ அறிவியலை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கில், 1996 ஆம் ஆண்டு ராஜா குரூப் மூலம் ராஜா ஆயுர்வேதா நிறுவப்பட்டது. எங்களிடம் 4 மையங்கள் உள்ளன, அங்கு குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சைகள் புத்துணர் மற்றும் சுக சிகிச்சைகள் போன்றவை யோகாவுடன் இணைந்து வழங்கப்படுகின்றன. அனைத்து மையங்களிலும் சிகிச்சைகள் மற்றும் சேவைகள் ஒன்றே; சுற்றுப்புற சூழலும் அறை வகைகளும் மட்டுமே மாறுபடும்.
NABH அங்கீகாரம் பெற்ற எங்களது மையங்கள், உங்களை புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் மாற்றக்கூடிய பல்வேறு ஆயுர்வேத சிகிச்சைகளுக்குச் சிறந்த இடமாக அமைகின்றன. நாங்கள் பலவிதமான மூலிகைகள் மற்றும் தாவரங்களை வளர்ப்பதுடன், முழுமையான GMP மற்றும் ISO சான்றிதழ் பெற்ற மருந்து உற்பத்திப் பிரிவையும் கொண்டுள்ளோம்.


ஆயுர்வேதம் என்றால் என்ன?
சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய ஆயுர்வேதம், உலகின் பழமையானதோர் பாரம்பரிய மருத்துவ முறையாகும். ஆயுர்வேதம் என்பது பாரம்பரிய மருத்துவ அறிவியல் மற்றும் மனித வாழ்வியல் முறை தத்துவத்தின் ஆழமான சிந்தனைகளை ஒருங்கிணைக்கிறது.
'ஆயு' என்றால் வாழ்க்கை, 'வேதம்' என்றால் அறிவு அல்லது அறிவியல் என்று பொருள். எனவே ஆயுர்வேதம் என்பது வாழ்க்கை அறிவியல் ஆகும்.
ஆயுர்வேதத்தின் நோக்கம் :
- ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல் மற்றும் ஆயுளை நீட்டித்தல்.
- நோய்களைக் குணப்படுத்துதல் மற்றும் உடல் செயல்பாடுகளின் சமநிலையைப் பராமரித்தல்.
To Consult a Doctor
+91 92194 00800
சிகிச்சையளிக்கப்படும் நோய்கள் மற்றும் நிலைகள்
ஆயுர்வேதம் ஆரோக்கியமானவர்களுக்கு நோய் வராமல் தடுக்கவும், புத்துணர்வு பெறவும் உதவுகிறது. மேலும் கீழ்கண்ட நோய்களுக்குச் சிறந்த தீர்வளிக்கிறது:
வாழ்க்கை முறை நோய்கள்:
உடல் பருமன்
சர்க்கரை நோய்
இதயத்தில் படியும் கொழுப்பு
பக்கவாதம்,இதய நோய்கள்
சரும நோய்கள்:
சொரியாசிஸ்
அரிப்பு
எக்ஸிமா(கரப்பான் நோய் அல்லது தோல் அழற்சி)
பொடுகு சிகிச்சை
மகளிர் நோய் கோளாறுகள்
PCOS (சினைப்பை நீர்க்கட்டி)
, எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis)
PMS (மாதவிடாய்க்கு முந்தைய நோய்க்குறி)
PCOS - மாதவிடாய் பிரச்சனைகள்
மனநல பிரச்சனைகள்:
ADHD
PTSD போன்றவை
மன அழுத்தம்
பதற்றம்
தூக்கமின்மை
சரும நோய்கள்:
சொரியாசிஸ்
அரிப்பு
எக்ஸிமா(கரப்பான் நோய் அல்லது தோல் அழற்சி)
பொடுகு சிகிச்சை
இதர குறைபாடுகள்:
புரோஸ்டேட் சுரப்பி நோய்கள்
சிறுநீரகக் கோளாறுகள்
இரைப்பை உபாதைகள் (Gastritis, GERD, IBS)
கல்லீரல் மற்றும் பித்தப்பை கோளாறுகள்
தசை மற்றும் எலும்பு பிரச்சனைகள்:
வாத நோய் (Arthritis)
முதுகுத்தண்டு வலி
கழுத்து வலி
இடுப்பு மற்றும் கழுத்து எலும்புகளில் டிஸ்க் விலகல்
நரம்பு மண்டல நோய்கள்:
அல்சைமர், பார்கின்சன்
MND எனப்படும் மோட்டார் நியூரான் நோய், மல்டிபிள் ஸ்களீரோசிஸ்
மல்டிபிள் ஸ்களீரோசிஸ்
முக்கிய நடைமுறைகள்: பஞ்சகர்மா சிகிச்சைகள்
Ayurvedic Approach to Holistic Healing
உத்வர்த்தனம்
ஆயுர்வேத மூலிகைப் பொடியால் செய்யப்படும் மசாஜ்.
லேபனம்
பாதிக்கப்பட்ட இடங்களில் மூலிகைப் பற்று போடுதல்.
பிஜூ
மூலிகை எண்ணெயில் நனைத்த பஞ்சை பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து மேலும் அந்த மூலிகை எண்ணெயை மிதமாக சூடாக்கி பாதிக்க பட்ட இடத்தில் வைத்துள்ள பஞ்சின் மேல் ஊற்றுதல்.
நவராக்கிழி
நவரா எனப்படும் ஒரு சிவப்பு ரக பாரம்பரிய அரிசியை பாலில் வேகவைத்து அதனை சிறு கையடக்க பொதி மூட்டைகளாக கட்டி கொண்டு அந்த மூட்டைகளைக் கொண்டு செய்யப்படும் மசாஜ்.
பொடிக்கிழி
மூலிகைப் பொடியை சிறு கையடக்க பொதி மூட்டைகளாக கட்டி கொண்டு அதனை சிறிய சூடாக்கி ஒத்தடம் கொடுத்தல்
உழிச்சில்
மூலிகை எண்ணெய்களைப் பயன்படுத்தி செய்யப்படும் மசாஜ்.
இலைக்கிழி
மூலிகை இலைகள் அடங்கிய சிறு கையடக்க பொதி மூட்டைகளாக கட்டி கொண்டு அதனை சிறிய சூடாக்கி ஒத்தடம் கொடுத்தல் .
சுவேதனம்
மூலிகை ஆவி குளியல் ( Herbal Steam bath)
சிரோதாரா
நெற்றியில் மூலிகை எண்ணெய் அல்லது மோர் ஊற்றுதல்.
தளம்
தலையின் உச்சியில் மூலிகை எண்ணெய் மற்றும் தேர்ந்தெடுத்த மூலிகைகளை அரைத்து தடவுதல்.
நஸ்யம்
மூக்கில் மூலிகை சொட்டு மருந்து ஊற்றுதல்
வஸ்தி
ஆயுர்வேத மருந்துகளை கொண்டு செய்யப்படும் ஒரு எனிமா (Enema) முறை சிகிச்சை.
விரேசனம்
பேதி மருந்து கொடுப்பதன் மூலம் குடல் மற்றும் கல்லீரலைச் சுத்தப்படுத்துதல்.
கர்ண பூரணம்
இது காதுகள் சம்பந்தமான பிரச்னைகளுக்கு செய்யப்படும் ஒரு மருத்துவமாகும். காதுகளில் ஆயுர்வேத சொட்டு மருந்துகள் ஊற்றி செய்யப்படும் ஒரு சிகிச்சையாகும்.
சிரோவஸ்தி
உச்சந்தலையில் மேல் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மூலிகை எண்ணெய் அல்லது திரவ மருந்துகளை ஊற்றி வைத்தல்.
தர்ப்பணம் மற்றும் நேத்ர தாரா
கண் சிகிச்சைகள்
If you want to know more,
submit an inquiry or call +91 92194 00800




